கோவை மாவட்டம் வால்பாறை பகுதியைச் சுற்றிலும் ஐம்பதற்கும் மேற்பட்ட எஸ்டேட் உள்ளன இங்கு தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எஸ்டேட் நிர்வாகத்தினர் குடியிருப்புகளை கட்டிக் கொடுத்துள்ளனர். தேயிலை தோட்டங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் வன விலங்குகளால் பாதிப்புக்குள்ளாவது தொடர்கதை ஆகி வருகிறது.
வால்பாறை பகுதியில் உள்ள காரை எஸ்டேட் பகுதியில் அப்பர் பாடலை புது தோட்டம் பகுதிகளில் பகல் நேரங்களில் யானைகள் கூட்டம் புகுந்து தொழிலாளர்களை அச்சுறுத்தி வருகின்றன அதேபோல் இரவு நேரங்களில் காட்டெருமை கூட்டங்கள் அப்பகுதியில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது மாலை நேரங்களில் தொழிலாளர்களின் குடியிருப்புக்கு அருகிலேயே காட்டெருமைகள் உலா வருகின்றன இதனால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும் தங்களது பணிகளை செய்ய முடியாமலும் மிகவும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர் எனவே வனவிலங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.