தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி சண்முகையா அவர்கள் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் திரு.எல் ரமேஷ் ஆகியோர் 154 பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் பேசியது:
தமிழ்நாடு அரசு கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது குறிப்பாக கிராமபுற மாணவர்களை கருத்தில் கொண்டு மிதிவண்டி காலை சிற்றுட்டி திட்டம் புதுமைப்பெண் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர் அறிவுரைகளை ஏற்று நன்றாக படித்து நாட்டிற்கு வீட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருகிறோம் மாணவர்களின் நலன் கருதி மாலை நேர பேருந்து வசதி செய்து தரப்படும்.
இந்நிகழ்ச்சிகள்
ஜான் தி மேல்நிலைப்பள்ளி தாளாளர் செந்தூர்மணி,
தலைமை ஆசிரியர் பிரேம்குமார்,
வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார்,
கிராம நிர்வாக அலுவலர் ஜாபர் சாதிக்,
ஒன்றிய கவுன்சிலர்கள் நவநீதகிருஷ்ணன், கனகரத்தினம், சுகுமார், மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன்,
நகரச் செயலாளர் லிங்கராஜ்,
மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார்,
மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் தங்கவேல்சாமி,
மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை,
மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி,
ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ஜெயா, ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.