Trending

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி I.N.D.I.A கூட்டணி கட்சிகளுக்கு வால்பாறை C.P.I.M கட்சி கோரிக்கை!!

கோவை மாவட்டம் வால்பாறை பொள்ளாச்சி பாராளுமன்றத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி சார்பாக கருத்துக்கணிப்பு கோவையில் இன்று மாலை திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் திமுக முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வால்பாறை நகரச் செயலாளர் திரு சுதாகர் என்கிற குட்டி அவரிடம் C.P.I.M கட்சியின் வால்பாறை பொறுப்பாளர்
P.பரமசிவம் கோரிக்கை மனு ஒன்று அளித்தார்.

மனுவில் வால்பாறையில் தேயிலை உற்பத்தி தற்பொழுது அழிந்து போகும் நிலையில் உள்ளது பருவநிலை மாற்றம் ஆள்பற்ற குறை பொருளாதார நெருக்கடி இதனால் இங்கு வேலை செய்யும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்குவதும் அடிப்படை வசதிகள் செய்து தருவதும் கேள்விக்குறியாக உள்ளது பல ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாத்து வந்த இந்த தேயிலைத் தொழில் புத்துணர்வு பெற மத்திய மாநில அரசுகள் நிதி உதவி அளித்து தொழிலாளர்கள் பற்றாக்குலையே பூர்த்தி செய்யவும் சொந்த ஊரில் இலங்கை மற்றும் தமிழகத்தில் உள்ள பலவேறு மாவட்டங்களில் சொந்த வீடு இடமில்லாமல் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தேயிலை பறிக்கும் தொழிலுக்கு வந்துள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவர்களுக்கு வால்பாறை பகுதியிலே இலவசமாக வீடு கட்டி தர வேண்டும் மலைப்பகுதியில் பாதுகாப்பான புதிய பேருந்தும், மகளிர் கண இலவச பேருந்தும், வால்பாறை பகுதியில் இருந்து மதுரை, பெரம்பலூர், பொன்னமராவதி, ஊட்டி ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்க வேண்டும். தற்பொழுது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆவின் பால் பண்ணையை வளர்ச்சி அடைய அனைவரும் பயன் பெற நகர கூட்டுறவு வங்கி மூலம் மாடு வளர்ப்பதற்கும், மகளிர்களுக்கு, வியாபாரிகளுக்கும், கடன் உதவி வழங்குவதற்கும் நகர கூட்டுறவு வங்கிக்கு நிதி ஒதுக்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp