
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் Rhodaminbe-B எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவு 3 (1) (zx) பிரிவு 3 (1) (zz) (iii) (v) (viii) & (xi) மற்றும் பிரிவு 25(1) (2) (i) (ii) & (v)-ன்படி தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் – 2006 ன்படி Rhodamine- B எனப்படும் செயற்கை நிறமூட்டியை கொண்டு தயாரித்தல், உணவுப் பொருட்களை பொட்டலமிடுதல் இறக்குமதி செய்தல் விற்பனை செய்தல் விழாக்கள் மற்றும் து நிகழ்வுகள் ஆகியவற்றில்
பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
மேலும் இதுகுறித்து ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அவர்களால் அனைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.





