தமிழ் நாடு தேவந்திர குல வேளாளர் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அவர்களுக்கு பாராட்டு விழா.!!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வீரன் சுந்தரலிங்கனார் மார்பளவு சிலை அகற்றப்பட்டு முழ திருவுருவ சிலை அமைச்சர் முன்னிலையில் கடந்த மாதம் திறக்கப்பட்டது.
ஒட்டப்பிடாரம் அருகே சுந்தரலிங்கம் நகரில் வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபம் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 11 ம்தேதி நடந்த சட்டமன்றத் கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அவர்கள் பேசியது குதிரையில் மேல் வீரன் சுந்தரலிங்கனார் அமர்ந்தவாறு முழதிருவுருவ வெங்கல சிலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் சிலை அமைக்கப்பட்டது தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த பெருமைக்கு உலகின் முதல் தற்கொலைப்படை தளபதி மாவீரன் சுந்தரலிங்கம் முழு உருவ வெண்கலச் சிலை அமைந்திட காரணமாக இருந்த ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அவர்களுக்கு தமிழ் நாடு தேவந்திர குல வேளாளர் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
எம்எல்ஏ சண்முகையா அவர்கள் பேசியது:
தொடர்ந்து மக்கள் பணி செய்து வருகிறான் சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட தலைவர் வீரன் சுந்தரலிங்கனார் தேவந்திர குல வேளாளர் மக்களின் கோரிக்கைகள் சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன். மக்கள் அரசியலுக்கு வரவேண்டும் தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும் என பேசினார் மேலும் மத்திய மாநில அரசு ஊழியர்கள் சங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.
பாராட்டு விழா நிகழ்ச்சியில் தலைமை அந்தோனி மாநில தலைவர் வரவேற்பு கண்ணன் மாவட்ட தலைவர் முன்னிலை மகாராஜா மாவட்ட பொருளாளர் ஆகியோர் முழுவதும் ஏற்பாடுகள் செய்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் வேலாயுதசாமி தனி வட்டாச்சியர் செல்வக்குமார் சுந்தரலிங்கம் வாரிசு பொன்ராஜ் அகில இந்திய வீரன் சுந்தரலிங்கனார் பேரவை தலைவர் LK முருகன் வீரன் சுந்தரலிங்கனார் அறக்கட்டளை தலைவர் சக்தி முருகன் வன்னிராஜ் ஊராட்சி ஒன்றியக்குழ உறுப்பினர் கனகரத்தினம் சுகுமாரன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக நகம்பட்டி உதவி பேராசிரியர் டாக்டர் பவானி முத்துக்கருப்பன் கல்வி குழுமம் பாலமுருகன் இடைநிலை ஆசிரியர் குணசேகரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.