உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தோவாளை ஊராட்சியில் சக்தி மகளிர் அறக்கட்டளை சார்பில் சக்தி குடும்ப விழா சக்தி மகளிர் அறக்கட்டளை தலைவர் குமரி கிழக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர், தோவாளை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், திருமதி.இ.சாந்தினி பகவதியப்பன் அவர்கள் தலைமையில் கோலகலமாக நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் நிகழ்ச்சியில் பெண்களுக்கு பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றது.
இவ்விழாவில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்,முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆரல்வாய்மொழி, பேரூர் பெருந்தலைவர் முத்துக்குமார், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் பரமேஸ்வரன், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் S.ஜெஸிம், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் தினேஷ்,மாநகர பகுதி கழகச் செயலாளர்,நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா முருகேசன், மருங்கூர் பேரூராட்சி பெருந்தலைவர் லட்சுமிசீனிவாசன், தோவாளை தெற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் மணி, தோவாளை கிருஷ்ணன் புதூர் ஊர் தலைவர் கேசவமுருகன், அரசியல் பிரமுகர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் சக்தி மகளிர் அறக்கட்டளை உறுப்பினர்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற சிந்தனையோடு
செய்தியாளர் கன்னியாகுமரி,
-P.இந்திரன்.