கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி வயிறார சாப்பிட பிரேமலதா வலியுறுத்தல்!!

 

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்து 68 நாட்களாகியும் அவர்மீது கொண்ட அன்பின் காரணமாக தமிழகத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் ஒவ்வொரு நாளும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தை காண மக்கள் பெரும் வாரியாக வந்தவண்ணம் உள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் கடந்த 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை 410000 திற்கு மேலான மக்களுக்கு சமபந்தி விருந்தாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

கடந்த ஏழு நாட்களாகவே தலைவாழை இலை போட்டு காலை இட்லி, வடை, பொங்கல் சட்னி, கேசரி, நண்பகல் சைவம் மற்றும் அசைவ வகையான உணவுகள் மற்றும் மாலை வெண்பொங்கல், கிச்சடி, சர்க்கரை பொங்கல் என மூன்று வேளையும், டேபிள் மற்றும் சேர் போட்டுக் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தை காண வரும் அனைவருக்கும் சமபந்தி விருந்து தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைவரையும் வயிறார சாப்பிடுமாறு பிரேமலதா அன்போடு கேட்டுக் கொண்டதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர்
-கன்னியாகுமாரி, இந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp