நேற்று தூத்துக்குடி விமான நிலையத்திற்க்கு வருகைபுரிந்த தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள R.சிவசாமி வேலுமணி அவர்களுக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் , சட்டமன்ற எதிர்கட்சி பொருளாளர், கடம்பூர்.செ.இராஜூ D.Ted., அவர்கள் தலைமையில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் சிறப்பான முறையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் தலைவர்கள் சிலைக்கு 3 வது மைல் உள்ள தேவர் சிலைக்கு மற்றும் தென்பாகம் காவல் நிலையம் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு மார்கெட் பகுதியில் அமைந்துள்ள காமராசர் சிலை பழைய நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள எம்ஜிஆர் சிலை மற்றும் வ.உ.சி ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் P.மோகன் B.Sc., Ex.MLA அவர்கள்,
விளாத்திக்குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் P.சின்னப்பன் D.EEE அவர்கள்,
தூத்துக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகவேல் அவர்கள், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் R.ஜவஹர் அவர்கள், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் I.இலட்சுமண பெருமாள் அவர்கள், வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஒட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் வீரபாண்டிP.கோபி அவர்கள்,
மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் .N.G.இராஜேந்திரன் அவர்கள், மாவட்ட மீனவரணி செயலாளர் ஒட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் உயர்திரு. அலோசனைமரியான் அவர்கள், மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் திரு.நீலகண்டன் அவர்கள், மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் திரு.S.R சின்னத்துரை அவர்கள், ஒன்றிய இளைஞரணி செயலாளர் திரு.K.N.தினேஷ்குமார் அவர்கள், மற்றும் தொண்டர்கள் , மகளிரணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு வேட்பாளர் அவர்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.