கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 43_வது வார்டுக்குட்பட்ட கலைநகரில் அமைந்துள்ள குமரி தந்தை நேசமணி நினைவு படிப்பகம் பழுதடைந்த நிலையில் உள்ளதையும், கலை சிறக்கன் குடியிருப்பு பூங்காவில் அமைந்துள்ள குடிநீர்த்தேக்க தொட்டியையும் மற்றும் சாலையோர மழைநீர் வடிகால் ஓடையில் சாக்கடை கலப்பதை தடுத்திடவும் தூய்மை பணியாளர்களின் பணியையும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் சீரமைக்கப்பட வேண்டிய பணிகளை உடனே செய்ய மாநகராட்சி அதிகாரிகளிடம் பரிந்துரை செய்தார் இந்நிகழ்வின் போது மாநகராட்சி பொறியாளர் பாலசுப்ரமணியன் , மண்டலத்தலைவர் ஜவஹர் மற்றும் பகுதி செயலாளர்கள் ஜீவா,சேக் மீரான், வட்ட செயலாளர், மாமன்ற உறுப்பினர் விஜயன்,வட்ட செயலாளர்கள் முருகன், ராமகிருஷ்ணன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் மோகன் ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
செய்தியாளர்
-P.இந்திரன்.கன்னியாகுமாரி,