கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் மிகப் பிரபலமான யானை காட்டுக்கொம்பன் படையப்பாவாகும்.காட்டுக்கொம்பன் படையப்பா கடந்த தினம் சாலை ஓரங்களில் உள்ள கடைகளை உடைப்பதும் இருசக்கர வாகனத்தின் தலைக்கவசம் மற்றும் இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தியது மற்றும் சாலையில் நின்று கொண்டிருந்த காரையும் சேதப்படுத்தியது. சிமெண்ட் ஏற்றி வந்தால் லாரியையும் சாலையில் தடை செய்தது, மற்றும் அன்று வேறொரு யானை இரவு நேரம் சுரேஷ் குமார் என்ற மணியை கொன்றது,அவரது ஆட்டோவையும் சேதப்படுத்தியது.
இதைப் போன்று நேற்றைய தினம் இரவு 9 மணிக்கு மூணாறில் இருந்து திருப்பூருக்கு செல்லும் பேருந்துவை படையப்பா யானை ஒன்பதாம் மெயிலில் வைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துவை தடை செய்தது மற்றும் சைடில் உள்ள கண்ணாடியையும் உடைத்தது. பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படவில்லை.
மற்றும் இரவு நேரங்களில் வனத்துறையின் அதிகாரிகளின் அறிவிப்பைத் தொடர்ந்து இரவு நேரங்களில் பயணம் தடை செய்யப்பட்டது. பேருந்தை சேதப்படுத்திய காட்டுக்கொம்பன் படையப்பா என சோலை வழியாக நயமக்காடு எஸ்டேட்டை வந்தடைந்தது. இதில் ஒரு சிறிய வியப்பு என்னவென்றால் பஸ்ஸிலும் படையப்பா என ஸ்டிக்கர் அடிக்கப்பட்டு உலா வந்த பேருந்து ஆகும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக,
-மணிகண்டன். கா, மூணாறு.