கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அருகாமையில் உள்ள காமராஜர் நகர் பகுதிகளில் சாலை பணி நடந்து கொண்டிருக்கிறது இக்காலகட்டங்களில் வால்பாறை காமராஜ் நகர் பகுதியில் புழுதி காற்று இதனால் விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்பகுதியில் சாலை தடுப்புச் சுவர் பணி நடந்து கொண்டிருக்கிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவ்வழியில் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி சாலைகளின் ஓரங்களிலேயே கற்கள் தகரம் போன்ற பொருட்களை சாலையின் அருகில் வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் சாலை பணி செய்து கொண்டு உள்ளவர்கள் கற்களை குமித்து வைத்து உள்ளனர். அந்த வழியில் வரும் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் அரசு பேருந்து லாரி போன்ற வாகனங்களால் பொதுமக்கள் நடக்க இடையூறாக உள்ளது.
அப்பகுதியில் உள்ள மண் காற்றுடன் கூடிய புழுதி காற்றாக அடிப்பதனால் வாகன ஓட்டுனர்கள் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள் ஆளாகிறார்கள் இவ்வழியில் செங்கற்கள் மணல் போன்றவற்றை சாலையில் போட்டு வைத்துள்ளனர் இதனால் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் கீழே விழுந்து காயங்களே ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது இதனைக் கண்டு பலமுறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கூறியும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை இதை கண்டு நடவடிக்கை எடுப்பார்களா என அப்பகுதியில் வரும் வாகன ஓட்டுனர்கள் பொதுமக்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.
வால்பாறை நிருபர்
-திவ்யகுமார்.