கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் வணிகர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து வால்பாறை தமிழக வணிகர் சம்மேளணம் அமைப்பின் நிர்வாகிகள் மின் பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினார்கள். மனுவில் வால்பாறை டவுன் பகுதியில் கைத்தொழில் செய்யும் சிறு வணிகர்கள் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் சிரமப்படுகின்றனர், வேதனைப்படுகின்றனர். கைத்தொழில் சிறு வணிகர்கள் தையல், முடி திருத்து, ஜெராக்ஸ், கம்ப்யூட்டர், டைப்பிங் செல்போன், தொலைக்காட்சி, கார்பெண்டர் மற்றும் சில கைத்தொழில் செய்யும் வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வால்பாறை மற்றும் மார்க்கெட் டவுன் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட.
நேரத்தில் மட்டும் மின தடை செய்ய வேண்டும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் வேலை செய்ய முடியாமல் கடைகளுக்கு வாடகை செலுத்துவதும் வாங்கிய கடன்களை அடைப்பதும் குடும்பச் செலவுகள் பார்ப்பதும் கடினம் இதனால் இவர்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. இவர்களின் குறைய மின்வாரிய செயல் பொறியாளர் சரி செய்து கொடுத்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று பொதுநலத்துடன் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
செய்தியாளர்
-P.பரமசிவம்.