கோவை அடுத்த வடவள்ளி ஐ. ஓ. பி. காலனி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சுந்தரம் (70). பைனான்சியர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி ஒருவர் எகிப்து நாட்டிலும், மற்றொருவர் பெங்களூரிலும் வசித்து வருகிறார்கள்.
சுந்தரம் அவரதுமனைவி பெரிய நாயகியுடன் ஐ. ஓ. பி. காலனி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி சுந்தரம் வீட்டை பூட்டி விட்டு காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மனைவி பெரியநாயகி உடன் சென்று விட்டார். நேற்று இரவு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டில் முன் பக்க கதவு பூட்டுஉடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ கதவு திறந்து கிடந்தது. உள்ளே வைத்திருந்த 10 பவுன் நகை கொள்ளை அடிக்கபட்டிருந்தது. வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் இரவில் புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ளார். மேலும் சாமி படம் அருகில் வைத்திருந்த ரூ. 19 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளான்.
இதுகுறித்து பெரியநாயகி வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.