கோவை மாவட்டத்தில் இருசக்கர வாகன தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது. 12 இருசக்கர வாகனங்கள் மீட்பு. கோவை மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை மாவட்டம், சூலூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக சூலூர் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார்களின் மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்குமாறு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், உத்தரவிட்டதன் பேரில், சூலூர் காவல்துறையினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு மேற்படி இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரியை தேடி வந்த நிலையில் சூலூர் KMCH மருத்துவமனை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த குழந்தைவேலு மகன் கௌதம் என்பவரை விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில் காவல்துறையினர் மேற்படி நபரை கைது செய்து நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், மேலும் திருடிய இருசக்கர வாகனங்களை எடுத்துச் சென்று விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.