
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த மின்கரைச்சாலை
வளர்ந்தாயமரம் பகுதிக்குட்பட்ட கேஸ் கம்பெனி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் தொடர்ந்து மழைப்பொழிவு இருந்து வருவதால் இப்பகுதியில் சாக்கடை நீருடன் மழை நீர் கலந்து தேங்கி இருப்பதால் இப்பகுதி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் பள்ளி மாணவர்கள் பெரியவர்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய வெளியில் செல்வதற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால்
சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

மேலும் தேங்கியிருக்கும் நீர் வெளியேறுவதற்கு வழித்தடம் இருந்தாலும் சிலர் அந்தப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது இப்பகுதி ஒவ்வொரு நாளும் நீரின் தேக்கம் அதிகரிப்பதால் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு செய்து இப்பகுதியை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தியாளர்
-M.சுரேஷ் குமார்.











