கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் அருகே உள்ள நேரியமங்கலம் ஐந்தாம் மைல் என்ற பகுதியில் கணவன் பாலகிருஷ்ணன் மனைவி சலஜா என்பவர்கள் வசித்து வந்தனர். பாலகிருஷ்ணனின் இரண்டாவது மனைவிதான் சலஜா. இவர் முதல் மனைவியின் மகனிடம் இருந்து பணம் கடனாக பெற்றுக் கொண்டதாகவும் அதை திருப்பி தராததால் அதனைப் பற்றி பாலகிருஷ்ணன் விசாரிக்க இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றி போக மது அருந்தியிருந்த பாலகிருஷ்ணன் கோவத்தின் உச்சகட்டத்திற்கே சென்றுள்ளார். கடைசியில் போதையில் இருந்த பாலகிருஷ்ணன் தனது மனைவி என்று கூட பாராமல் அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இடுக்கி டி ஓய் எஸ் பி நெல்சன் மாத்தியூ சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை ஆரம்பித்துள்ளார். உடலை உடனடியாக உடலை மீட்டு இடுக்கி மருத்துவமனையில் உடற்கூர் ஆய்விற்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. இன்று அவரை அடிமாலி காவலர்கள் கைது செய்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.