கோவை மாவட்டம் பொள்ளாச்சி இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராம போட்டியில் பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதூர் மற்றும் நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள உல்லாடா, புதுச்சேரி மாநிலத்தில் திருநள்ளாறு உள்பட 35 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
அதன்படி வேட்டைக்காரன் புதூரை பொறுத்தவரை அற்புதமான மரங்கள் சூழ்ந்த சாலையை கொண்ட பகுதி மேலும் சுற்றிலும் ஆறுகளும்,தென்னை மரங்களும், பாரம்பரிய கட்டிடங்களும், புகழ் பெற்ற கோயில்களும், மெய்சிலிர்க்க வைத்துவிடும். இந்த கிராமத்தில் ஏராளமான சினிமாக்கள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளை என்று சொல்லாம் மேலும் கிராம வாழ்க்கையை விரும்புவோர் ஒருமுறை இங்கு வந்தால் திரும்ப செல்ல மனமே வராது என்பது உறுதி. பொள்ளாச்சியின் அடையாளமாக திகழும் வேட்டைக்காரன் புதூர் பலருக்கு பிடித்த ஊராகும் என்பது குறிப்பிடத்தக்கது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-M.சுரேஷ்குமார்.