கோவை சுந்தராபுரம் மதுக்கரை ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை பதுக்கி விற்பனை செய்வதாக சுந்தராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரை, கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 505 போதை மாத்திரை, 150 கிராம் கஞ்சா, 3 செல்போன், ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா, போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சிஜூ(25), சிட்கோ சத்திய மூர்த்தி நகரை சேர்ந்த ஷமீலா(27) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-pசி.ராஜேந்திரன்.