தமிழகத்தில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது 20 நாட்களாக மீனவர்களை மீட்காமல் இந்த அரசு தூங்கிக் கொண்டிருப்பதாக தருவைகுளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ குற்றச்சாட்டு…

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தருவைகுளம் மீனவ கிராமத்திற்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தில் இருந்து கடந்த 21 மற்றும் 23ஆம் தேதி மீன் பிடிக்க சென்ற தருவைகுளம், வேம்பார், மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை கடந்த ஐந்தாம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 22 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப் படகுகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக மீட்டு தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தருவைகுளம் மீனவ கிராமத்திற்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர்களுக்கு தேவையான நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்கள் விரைவில் வழங்கப்படும் என்றார்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழகத்திலேயே மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை ஏராளமான மீனவ குடும்பங்கள் உள்ளது. இலங்கையினுடைய கடல் எல்லை அருகாமையில் உள்ள காரணத்தினால் தூத்துக்குடி மற்றும் தருவைக்களம் மீனவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்றார்.

எனவே இந்த நிலை எல்லாம் மாற வேண்டும் என்பதற்காக 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இப்பகுதி மீனவர்களுக்கு மீன்பிடி இறங்குதளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து அதிகப்படுத்தினோம் தொடர்ந்து மீனவர்களுக்கு தேவையான சாட்டிலைட் செயற்கைக்கோள் போன்கள் உள்ளிட்டவை எல்லை தாண்டி செல்லாமல் இருப்பதற்காக மீனவர்களுக்கு வழங்கப்பட்டது என்றார். தொடர்ந்து ஐஸ் பேக்டரி வேண்டும் என்று சொன்னார்கள் அதன் அடிப்படையில் பத்து கோடி ரூபாய் செலவில் ஐஸ் பேக்டரியானது கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது என்றார்.

தற்போது தருவைகுளம் மீனவர்கள் காற்றின் திசை மாறுபாடு காரணமாக எலியை தாண்டி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார். இதே காரணம் காட்டி தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர் என்றார். கடந்த 20 நாட்களாக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு இவ்விசயத்தில் மெத்தன போக்காக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

இவ்விஷயத்தில் தமிழக சார்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தையே முடக்கியிருக்க வேண்டாமா என்றார். இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய வலியுறுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்திருக்கின்றனர்.

கோரிக்கை மனுவை எங்களைப் போன்ற எதிர்க்கட்சிகள் தான் அளிக்க வேண்டும் ஆனால் ஆளுங்கட்சியில் அதிகாரத்தில் இருப்பவர்கள் கோரிக்கை மனு அளிப்பது ஒரு கண்துடைப்பாகத்தான் பார்க்க முடிகிறது என்றார்.

ஒரு குழவை அமைத்து இலங்கைக்கு அனுப்பி உடனே மீனவர்களை விடுவிக்க இந்த அரசு எந்த விதமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டினார். சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களின் குடும்பங்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக அவர் கூறினார். இந்நிலையில் அவர்களுக்கு ஒரு நிவாரணம் கூட வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு என்று அளிக்க இருப்பதாக தெரிவித்தார். வரும் 20ம் தேதிக்குள் மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை யொன்றால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையின்படி விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.

தமிழகத்தில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. 20 நாட்களாக மீனவர்களை மீட்காமல் இந்த அரசு தூங்கிக் கொண்டிருப்பதாக கூறினார். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வன்முறை சம்பவங்கள் கொலை கொள்ளை அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவையே வழிநடத்திய செல்ல இருக்கின்ற மாணவர் சமுதாயம் மற்றும் இளைஞர்கள் தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் சமூக விரோத செயல்கள் இளைஞர்கள் மூலம் பெருகி வருவது தான் கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது.

போதைப் பொருளை கட்டுப்படுத்த தவறிய அரசாக தமிழக அரசு உள்ளது என்ற அவர், தமிழகத்தின் எதிர்காலத்திற்கு ஒரு கேள்விக்குறி என்றார். இதை மாற்ற அரசு முயல வேண்டும் அல்லது மாற்றப்பட்டால் தான் தீர்வு கிடைக்கும் என்றார். தொடர்ந்து தமிழகத்தில் காவல்துறை முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,முதலமைச்சரின் அதிகாரங்கள் பலருக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், யாருடைய ஆணியை பின்பற்றி செயல்படுவது என்பது தெரியாமல் அதிகார மையங்கள் முதலமைச்சர் குடும்பத்தினரை சுற்றி இருப்பதால் காவல்துறை செயலிழந்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.

ஆளுங்கட்சியை சார்ந்த அவர்களே போதைப்பொருள் கடத்தலில் அதிகம் ஈடுபடுவதால் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.நிகழ்சியில் முன்னால் எம்எல்ஏ மோகன் சிண்ணப்பன் முன்னால் யூனியன் சேர்மன் காந்தி என்ற காமாட்சி மாவட்ட மீணவர்அணி செயலாளர் ஆலோசனைமரியன் மாவட்டம் மாணவரணி செயலாளர் சின்னத்தூரை உட்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பேட்டி : கடம்பூர் ராஜூ – எம்எல்ஏஏ – அதிமுக முன்னாள் அமைச்சர் நாளைய வரலாறு செய்திகளுக்காக

-எஸ் நிகில் ஓட்டபிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp