தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் சுடலைமணி திருமண மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கும் விழா அதிமுக முன்னாள் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அதிமுக நிர்வாகிகளுக்கு டிஜிட்டல் வடிவிலான உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில்,
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது தமிழ்நாட்டில் அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது ஒரு எம்பி சீட்டில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது . பாஜகவிற்கு அதுவும் கூட கிடைக்கவில்லை. ஏனெனில் பாஜக வடமாநிலங்களை வாழ வைக்கிறது தென் மாநிலங்களை புறக்கணிக்கிறது என்ற உணர்வு தமிழ்நாட்டு மக்களிடம் அதிகமாக இருக்கிறது .அதனால் பாஜகவுடன் சேர்ந்து அதிமுகவும் கெட்டு போய் விடக்கூடாது என்பதற்காக பாஜகவுடன் கூட்டணி சேரவில்லை. தமிழ்நாட்டின் பிரச்சினைகளான நீட் தேர்வு விலக்கு எய்ம்ஸ் பிரச்சினை காவிரி பிரச்சனை முல்லைப் பெரியாறு பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளை பாஜக தீர்க்கவில்லை எனவே இவர்களுடன் கூட்டணி வைத்தும் தமிழ்நாடு பிரச்சினைகளை அவர்கள் தீர்க்கவில்லை எனவே பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று அதிமுக போட்டியிட்டது நாம் வெற்றி பெறவில்லை அதேபோல் பாஜக வையும் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை மேலும் பாஜகவை விரும்பாத தமிழ்நாடு வாக்காளர்கள் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை இந்தியா கூட்டணிக்கு தான் வாக்களித்திருக்கிறார்கள் அது நமக்கு எதிரான ஓட்டு அல்ல சட்டமன்ற தேர்தல் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் ஆட்சி நல்லாட்சியா? எடப்பாடியார் ஆட்சி நல்லாட்சியா என்று மக்கள் தராசில் எடை போடும்போது அதிகமாக அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள் அப்பொழுது அண்ணன் எடப்பாடி யார் தமிழ்நாட்டில் முதலமைச்சராக பொறுப்பேற்பார் மேலும் தமிழ்நாட்டில் தற்போது சட்ட ஒழுங்கு பிரச்சனை கொலை கொள்ளை கள்ளச்சாராயம் பிரச்சனை போதைப்பொருள் அதிகரிப்பு கடந்த மூன்று வருடங்களாக விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்படவில்லை இந்த ஆட்சியில் பொதுமக்கள் பயத்தில் இருக்கிறார்கள் இந்த ஆட்சியில் மக்கள் வெளியில் போனால் என்ன நடக்குமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள் என பேசினார்.
இந்நிகழ்வில் அதிமுக மாவட்டம் மாணவரணி செயலாளர் சின்னத்தூரை மாவட்ட கலை பிரிவு செயலாளர் போடு சாமி ஒன்றிய கவுன்சிலரர்கள் ஆலோசனைமரியண் கோபி மற்றும் தினேஷ் கண்ணன் ஆறுமுகச்சாமி உட்பட அதிமுக முக்கிய பிரமுகர்கள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-எஸ் நிகில் ஓட்டபிடாரம்.