Trending

திறக்கப்படாத கடைகளால் தொடரும் வருவாய் இழப்பு!!!

கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள பூமாலை வணிக வளாகத்தில் பெரும்பாலான கடைகள் பயன்படுத்தப்படாமலும், கொடுக்கப்பட்ட கடைகள் திறக்கப்படாமலும் இருப்பதால் வருவாய் இழப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. மத்திய அரசு உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில், கடந்த, 2002ம் ஆண்டு, எஸ். ஜி. எஸ். ஒய். , என்ற திட்டத்தின் கீழ் பூமாலை வணிக வளாகம் கட்டப்பட்டது.

முதல் தளத்தில், 22 கடைகளும், மேல் தளத்தில் ஆலோசனை அரங்கம் உள்ளது. ஆரம்ப காலத்தில், மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு பயிற்சி அளிக்கவும், அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்தவும் இம்மையம் அமைக்கப்பட்டது. தற்போது இம்மையம் மீண்டும் பெரிதளவில் செயல்பாடுகள் இன்றியும், யாருக்கும் பயன் இல்லாமலும் உள்ளன. மொத்தமுள்ள 22 கடைகளில், 9 கடைகள் மட்டுமே வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதிலும், மூன்று கடைகள் மட்டுமே தினந்தோறும் செயல்படுவதை காணமுடிகிறது. பல மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்த இடமின்றி உள்ள சூழலில் உரிய வாய்ப்புகளை வழங்காமல், பூட்டி வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. வணிக வளாகத்தில், 10க்கு 10 , 10க்கு 8 என்ற அளவுகளில் கடைகள், 6000, 5000, 4500 ரூபாய்க்கு வாடகைக்கு விடப்படுகிறது. இதன் படி சராசரியாக, சுமார் 88000 ரூபாய் மாதத்திற்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp