தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் இருந்து 2 படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 22 பேரை இலங்கைக் கடற்படையினர், இலங்கை எல்லைக்குள் நுழைந்தாக கூறி கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் கல்பிட்டி மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்த விசாரணை, கல்பிட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஒரு படகில் சென்ற 12 மீனவர்களுக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து கடந்த 3 ஆம் தேதி தீர்ப்பளித்தது. மற்றொரு படகில் சென்ற 10 மீனவர்கள் மீதான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மற்றொரு படகில் இருந்த 10 மீனவர்களுக்கு இலங்கை பணத்தில் தலா ரூ.35 லட்சம் அபராதம் விதித்தும் அபராதம் செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் ஆத்திரமடைந்த அந்த 10 மீனவர்களும் நீதிமன்ற வளாகம் முன்பு திடீர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை காவல்துறையினர் சமானப்படுத்தி அழைத்துச் சென்றனர். மேலும் இந்த தீர்ப்பு தருவைகுளம் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தற்போது சிறையில் உள்ள 22 மீனவர்களையும் விரைந்து மீட்குமாறு தருவைகுளம் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.