தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் 2023 _ 24 ஆம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து பயிர்களுக்கும் முழுமையான காப்பீடு இழப்பீடு வழங்க கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.* போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே பி பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் புவிராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ராகவன், மாவட்ட பொருளாளர் நம்பிராஜன் மாவட்ட நிர்வாகிகள் டி.சீனிவாசன், ஐ.கணபதி, ஏ.பாலகிருஷ்ணன், எஸ்.செல்வராஜ், பி.மணி, ஜி.ராமசுப்பு, கிரேஷிபாலம்மாள், உள்பட பல கிராமங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தனியார் காப்பீட்டு நிறுவனத்தால் உளுந்து பாசிக்கு குறைவாக இழப்பீடு விடுவிக்கப்பட்ட ஓட்டப்பிடாரம் , எப்போதும் வென்றான், வேடநத்தம், பசுவந்தனை கடலையூர் உள்ளிட்ட வருவாய் கிராம விவசாயிகளுக்கு முழுமையாக பயிர் காப்பீடு இழப்பீடு கிடைக்கச் செய்ய கோரியும் மிளகாய், வெங்காயம்,மல்லி, கம்பு சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கும் முழுமையான காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுவரை உழுந்து பாசிக்கு காப்பீடு இழப்பீடு கிடைக்காமல் விடுபட்ட விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐந்தாண்டு சராசரி என்ற மகசூல் கணக்கை நீக்க வேண்டும்.
தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு பதில் அரசே காப்பீட்டு நிறுவனத்தை நடத்தி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.