தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் பள்ளியில் நடைபெற்ற வருமுன் காப்போம் மருத்துவ முகாம் முகாமினை எம்எல்ஏ சண்முகையா தொடங்கி வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கோவில்பட்டி சுகாதார மாவட்டம் மூலம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் பள்ளியில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை எம்எல்ஏ சண்முகையா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து
பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டையை வழங்கி பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை பார்வையிட்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கினார்கள். தொடர்ந்து வெறிநோய் தடுப்பு மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதி மொழிகளையும் பொதுமக்களுடன் இணைந்து எடுத்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ்,
மாவட்ட மருத்துவ அலுவலரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன்,
வட்டார மருத்துவ அலுவலர் அன்புமாலதி,
சிறப்பு மருத்துவ அலுவலர்கள்
ஐஸ்வர்யா,
ரேவதி,
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெரியசாமி,
தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி,
ஒன்றிய துணை செயலாளர் சிவன்,
ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன்,
மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன்,
மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார்,
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தங்கதுரை பாண்டியன்,
மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஞானதுரை,
மாவட்ட மருத்துவ அணி தங்கவேல்சாமி,
ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் .ஜெயா,
ஒன்றிய தொண்டரணி கோபால்,
ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நல்லமுத்து,
கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார்,
மற்றும் சுகாதாரதுறை அலுவலர்கள், செவிலியர்கள்,
கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-எஸ் நிகில் ஓட்டபிடாரம்.