கோவை மாவட்டம் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியிடம் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக பசுமை நிறைந்த மலைப்பகுதியான வால்பாறை உலகில் எங்கும் இல்லாத அளவு கால சூழ்நிலை நிலவுவதால் இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகிறார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுப்பதில்லை ஆனால் ஆழியார் செக் போஸ்டில் நுழைவு கட்டணமாக 50 ரூபாயும், ஒரு நபருக்கு 30 ரூபாய் விதம் வசூல் செய்கிறார்கள். அதேபோல் சின்னக்கல்லாரில் ஒரு நபருக்கு 30 ரூபாயும், மறுபடியும் ஒரு நபருக்கு 20 ரூபாய் விதம் மற்ற இடங்களை பார்ப்பதற்கு வசூல் செய்கிறார்கள்.
ஆனால் சுற்றுலா பயணிகள் செல்லும் இடங்களில் அடிப்படை வசதிகள் எதுவுமே கிடையாது.பார்க்க வேண்டிய இடங்களில் முள்வேலி போட்டு பார்க்க விடாமல் சுற்றுலா பயணிகளை தடுக்கிறார்கள் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர், வால்பாறையில் நிரந்தர கார் பார்க்கிங் வசதிகள் இல்லாமல் போக்குவரத்தும் இடையூறு ஏற்படுகிறது.
அதேபோல் இந்த நவீன காலத்திற்கு முன்பாக வெள்ளமலை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது பார்ப்பதற்கு இயற்கையாகவும் அழகாகவும் உள்ளது. அதை பார்ப்பதற்கு நவீன காலத்திற்கு முன்பாக கட்டப்பட்டதால் மிகவும் சிறப்பாக இருக்கும் அதை பொதுப்பணித்துறை பார்க்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வரும் சுற்றுலா பயணிக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் சுற்றுலா பயணிகள் பார்க்கும் இடங்களே அனுமதிக்க வேண்டும் என்று வணிகர் சம்மேளனதிண் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கும் சம்பந்தப்பட்ட துறைக்கும் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இதை உடனடியாக மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறை செய்து தர வேண்டும் என்று வணிகர் சம்மேளனதிண் நிர்வாகிகள் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
-P.பரமசிவம், வால்பாறை.