கோவை மாவட்டம் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் வால்பாறை நகராட்சி ஆணையாளர் விநாயகம் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்கள் மேலும் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் உதயம் நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது முகாமில் பிரஷர், நீரிழிவு நோய்,ECG,கர்ப்பப்பை,மார்பக புற்றுநோய் மற்றும் காசநோய் பரிசோதனை பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது இயற்கை மருத்துவத்தை பற்றியும் அதன் பயனை பற்றியும் எடுத்துக் கூறினார்கள் சுமார் 80 பேர் இம்முகாமில் பயனடைந்தனர்.
இம்முகாமில் வால்பாறை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வீரபாபு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் இனியவன்,அருண் பிரகாஷ்,ஜெகன் மற்றும் பல அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
சுகாதாரத்துறை ஆய்வாளர் பேசுகையில் குப்பைகளை எவ்வாறு பிரிக்க வேண்டும் எவ்வாறு கையாள வேண்டும் இதனால் பொதுமக்களுக்கு என்ன என்னென்ன பயன்கள் என்றும் எண்ணற்ற பயன்களை எடுத்துக் கூறினார அரசு மருத்துவமனை ஊழியர்கள் அலுவலர்கள் நகராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மை பணி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-P.பரமசிவம், வால்பாறை.