கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் கேரளாவில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் திட்டத்தில் ஏழை எளிய மக்களுக்காக இடம் மற்றும் வீடு வாங்கித் தருவதற்காக லைஃப் ஸ்கீம் என்ற திட்டத்தை கேரளா அரசு அறிமுகப்படுத்தியது. வாழ்வாதார சேர்க்கை நிதி அதிகாரமளித்தல், LIFE என்றும் அழைக்கப்படுகிறது, இது மாநிலத்தில் உள்ள அனைத்து வீடற்ற மக்களுக்கும் இலவச வீடுகளை வழங்குவதற்கான கேரள அரசின் முயற்சியாகும். 2024-25 மாநில பட்ஜெட்டில், லைஃப் மிஷன் கேரளாவுக்கு அரசாங்கம் 1,132 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது, இது நிதியாண்டின் இறுதிக்குள் 4.25 லட்சத்தை உருவாக்க பயன்படுத்தப்படும்.
எனக் கூறப்பட்ட நிலையில் லஞ்சம் கொடுக்காதவர்களுக்கு நீண்ட தூரத்தில் உள்ள இடத்தை கொடுப்பதும் அருகில் உள்ள இடத்தை வாங்குவதற்கும் சீக்கிரத்தில் வீடு கிடைப்பதற்கும் லஞ்சம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே உடனடியாக கொடுக்கப்படுவதாகவும் தேவிகுளம் எம்.எல்.ஏ ராஜா அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். பொதுவாக இந்த திட்டத்தில் வீடோ அல்லது இலவச இடமும் கொடுப்பதற்கு முன்பதாக இலவச வீடு அல்லது இடமோ வாங்குபவர்களை குறித்து கிராமசபை மூலமாக அவர்களுடைய வாழ்வாதார நிலையை முடிவெடுத்து பின்னர் அவர்களுக்கு வீடோ அல்லது இடமோ வழங்க வேண்டும் எனவும் ஆனால் தற்பொழுது,
எந்தவித ஆலோசனைகளும் இன்றி லஞ்சம் கொடுக்கிறவர்களுக்கு மட்டுமே இலவச வீடு அல்லது இடமோ தரப்படுகின்றன எனவும் இடைத்தரகர்கள் மூலமாக இந்த லஞ்சம் பரிவர்த்தனை நடைபெறுவதாகவும் இதனால் ஏழை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சரியான நபர்களுக்கு இந்த திட்டம் சென்று சேர்வதில்லை என்றும் இதைக் குறித்து மத்திய அமைச்சரிடமும் மாநில அரசிடமும் தகவல் அளிக்கப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என தேவிகுளம் சட்ட மன்ற உறுப்பினர். வழக்குரைஞர் A. ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணார்.