கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பஸ் நிலையம் அருகில் உள்ள குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், சந்தை அருகே புதிதாக தனியார் FL2 மதுபான கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய FL2 மதுபான கடை அமையவிருக்கும் இடம், குடியிருப்புப் பகுதி மற்றும் சந்தை ஆகியவை ஒரே இடத்தில் உள்ளதால், பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் மிகப்பெரிய இடையூறு ஏற்படும் என்றும், சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகும் என்றும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஏற்கனவே இந்த இடத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அந்த டாஸ்மாக் கடைக்கு பின்புறம் இந்த புதிய தனியார் FL2 மதுபான கடை அமைந்தால், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கும், சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலும் ஆபத்தும் உருவாகும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த அனைத்தையும் கருத்தில் கொண்டு, புதிய FL2 மதுபான கடை அமைவதற்கு அனுமதி அளிக்க கூடாது என்று கோரி, அந்த பகுதி பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.