தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து விளாத்திகுளம் to மாவிலடை வழித்தடத்தில் செல்லும் TN 72 N 1854 என்ற வாகன பதிவு கொண்ட அரசு பேருந்து (77A) இன்று காலை 11:30 மணிக்கு மாவிலடையில் இருந்து புறப்பட்டு விளாத்திகுளம் நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து விளாத்திகுளம் போக்குவரத்து கழக பணிமனை சேர்ந்த கார்த்திக் என்ற தற்காலிக ஓட்டுநர் இயக்கி வந்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தற்போது கரிசகுளம் அருகில் உள்ள விளம்பரத்துப்பட்டி விளக்கில் அருகில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் உட்பட பேருந்தில் வந்த பயணிகள் அனைவரும் எந்தவித காயங்களும் இன்று உயிர் தப்பி உள்ளனர். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று விளாத்திகுளம் காவல்துறை தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் விளாத்திகுளம் போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த அதிகாரிகள் பயணிகளை மீட்டு மற்றும் பேருந்தில் விளாத்திகுளம் அனுப்பி வைக்க பட்டனர்.
டயர் வெடித்து பள்ளத்தில் கிடக்கும் இந்த அரசு பேருந்தை ஜேசிபி வாகனத்தை வரவழைத்து மீட்டனர் மேலும் இந்த விபத்து குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.