தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா மகாநாடு நடைபெற்றது. மாநாட்டு கொடியை மூத்த உறுப்பினர் அர்ச்சுணப்பெருமாள் ஏற்றி வைத்தார். ராமலிங்கம் அய்யனார் ஆகியோர் தலைமை குழுவாக இருந்து மாநாட்டை வழி நடத்தினர். தாலுகா குழு உறுப்பினர் சேகர் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விளாத்திகுளம் நகர செயலாளர் பாலமுருகன் வரவேற்புரை ஆற்றினார். மாநாட்டை துவங்கி வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரசல் பேசினார். தாலுகா செயலாளர் ஜோதி வேலை அறிக்கை முன்வைத்தார். தாலுகா குழு உறுப்பினர் யோவான் தீர்மானங்களை முன் மொழிந்தார். மாநாட்டை நிறைவு செய்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் புவிராஜ் பேசினார். தாலுகா குழு உறுப்பினர் ஜெயவேல் முருகன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் புதிய தாலுகா செயலாளராக ஜோதி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தாலுகா குழு உறுப்பினர்களாக யோவான், மலைக்கனி, பாலமுருகன், ஜெயவேல் முருகன், செல்வி, கிருஷ்ணராஜா, கனகராஜ், அய்யனார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. விளாத்திகுளம் கஸ்பா மற்றும் கீழ விளாத்திகுளம் கிராம எல்லையில் பட்டா பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை நிலங்கள் மற்றும் வீடுகளை கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்யும் முயற்சியை கைவிட வேண்டும்.
2. விளாத்திகுளம் புதூர் அரசு மருத்துவமனைகளை விரிவாக்கம் செய்யவும்… கூடுதல் மருத்துவர்களை நியமனம் செய்திடவும் வேண்டும்.
3. புதூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அமைத்திட வேண்டும்.
4. தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம் அருப்புக்கோட்டை வழியாக ரயில்வே திட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து முடிக்க வேண்டும்.
5. ஜெ.ஜெ.எம். குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும்.
6. விளாத்திகுளம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளையும் உரிய வழித்தடத்தில் இயக்க வேண்டும்.
7. மிளகாய் உள்ளி உள்ளிட்ட பயிர்களுக்கு 2023_24 ம் ஆண்டு பயிர் காப்பீடு இழப்பீடு உடனடியாக விடுவிக்க வேண்டும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.