போத்தனூர் 21-10-2024 கோவை-மேட்டுப்பாளையம் இடையேயான 2 ரயில் சேவைகள் அக்டோபர் 24 மற்றும் 27ம் தேதிகளில் ரத்து.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சேலம் ரயில்வே கோட்டத்தில் நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 24ம் தேதி 2 ரயில்களும், அக்டோபர் 27ம் தேதி 2 ரயில்களும் ரத்து செய்யப்படவுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 24ம் தேதி ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரம்:
போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட வேண்டிய 06816 மேட்டுப்பாளையம் ரயில், முழுமையாக ரத்து.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட வேண்டிய 06817 கோயம்புத்தூர் ரயில், முழுமையாக ரத்து.
அக்டோபர் 27ம் தேதி ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரம்:
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து பகல் 1.05 மணிக்கு புறப்பட வேண்டிய 06815 போத்தனூர் ரயில், முழுமையாக ரத்து.
போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட வேண்டிய 06816 மேட்டுப்பாளையம் ரயில், முழுமையாக ரத்து செய்யபட்டுள்ளது என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சையத் காதர்
குறிச்சி.