நகராட்சிக்குட்பட்ட சிந்தாமணியில் ஆதி திராவிட நலத்துறை மூலம் 2015 ஆம் ஆண்டு ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் பொது எரிவாயு தகனம் மேடை அமைக்கப்பட்டது. இந்த தகன மேடையானது கடந்த சில மாதங்களாக செயல்படாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக புளியங்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த மக்கள், இறந்த தங்களது உறவினர்கள் உடல்களை கடையநல்லூர் அல்லது தென்காசிக்கு எடுத்துச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதன் காரணமாக கால விரையம் மற்றும் பணவகரயமும் ஏற்படுவதோடு பொதுமக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகின்றனர்.எனவே புளியங்குடி நகராட்சி நிர்வாகமானது உடனடியாக நடவடிக்கை எடுத்து தகனமேடையை திறப்பதற்கு உண்டான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தென்காசி மாவட்ட செய்தியாளர்
-திருமலை குமார்.