கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சாலை ஓரங்களில் சுற்றுலா வாகனங்களும் இதர வாகனங்களும் அங்கங்கே நிறுத்தப்படுவதால் சீரான போக்குவரத்து தடை படுகிறது.
குறிப்பாக சாலை குறுகலாக இருப்பதால் தற்பொழுது சுற்றுலா வரும் வாகனங்கள் நெருசலில் சிக்கித் தவிக்கிறது இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுகுறித்து சி ஐ டி யு சங்க நிர்வாகிகள் கூறுகையில் இது தொடர்பாக தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கும் பலமுறை மனு கொடுத்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மாவட்ட நிர்வாகத்திற்கும், நகராட்சி ஆணையர், நகர மண்ட உறுப்பினர்கள், அனைவரிடம் எடுத்துக் கூறியும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். இவர்கள் எந்த வேலையும் செய்யாமல் வேலை செய்தது ஆதாரத்தை தயார் செய்து மக்கள் வரிப்பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.
அரசு அதிகாரிகளும் இப்படித்தான் ஆட்சியாளரும் இதே நிலைதான் இதை பார்க்கும் பொழுது வேதனை அடைவதாக தெரிவித்தனர். மேலும் வால்பாறையில் சாலை குறுகலாக இருப்பதால் வாகன போக்குவரத்து அங்கங்கே நிற்கிறது போக்குவரத்துக் காவலர்களும் இல்லை சுற்றுலா பயணிகளுக்கும் புதிய இடம் சரியாக வழி தெரியாது தமிழக அரசும், ஆட்சியாளரும், நினைத்தால் இதை உடனடியாக சரி செய்து கொடுக்கலாம்.
உயிரை கையில் பிடித்துக்கொண்டு மெயின் ரோட்டில் நடக்கும் வயதான முதியோர்கள், கை குழந்தையுடன் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அனைவரையும் பாதுகாக்கலாம். அரசு செய்து கொடுக்குமா இல்லை ஆட்சியாளர்கள் தேர்தல் நேரத்தில் பணத்தை கொடுத்து மக்களிடம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்று எதுவுமே செய்யாமல் இருக்கலாம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்கின்றனர் இப்பகுதி சமூக ஆர்வலர்கள்.
-P.பரமசிவம்.
One Response
உண்மைதான்.