தூத்துக்குடி டிச_24: தூத்துக்குடி மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்தினை நேரில் சந்தித்து அளித்துள்ள கோரிக்கை மனுவில், “12.12.2024 அன்று பெய்த பெரு மழையினால் கயத்தாறு, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய வட்டங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த மானாவாரி பயிர்கள் பெரும் சேதமடைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று என வலியுறுத்தியுள்ளார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன்,
விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர்
முனிசக்தி ராமச்சந்திரன்,
புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனபதி,
கரிசல் பூமி வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.