பழங்குடியின மக்களின் பொங்கல் விழா!! பொள்ளாச்சி சார் ஆட்சியர் பங்கேற்பு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட சர்க்கார்பதி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில், நாகரூத் மலை கிராம பழங்குடியின மக்களுடன் இணைந்து இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட சர்க்கார்பதி பகுதியில் உள்ள நாகரூத் மலை கிராம பழங்குடியின மக்களின் பொங்கல் விழாவில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அ.கேத்தரின் சரண்யா அவர்கள் கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

அறக்கட்டளை சார்பில் 13 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட வேட்டி சட்டை மற்றும் சேலை புத்தாடைகளை உடுத்தி நாகரூத் 1. நாகரூத் 2 மலை கிராம பழங்குடியின மக்கள் சேர்ந்து 13 பொங்கல் வைத்தனர். மேலும் உறியடி விளையாட்டு மற்றும் மியூசிக் சேர் போட்டி நடைபெற்றது. வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.

விழாவில் உறியடி விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு பொருட்களும் சிறப்பு விருந்தினர்களுக்கு பொங்கல் நினைவு கேடயமும் இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை வழங்கியது. மியூசிக் சேர் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு பொருட்களை பசுமைக்குரல் அறக்கட்டளை வழங்கியது.

இதில் உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம், பொள்ளாச்சி வனச்சரகர் ஞான பாலமுருகன், ஆனைமலை வட்டாச்சியர் ராஜேந்திரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனி வட்டாச்சியர் சேகர், ஆனைமலை காவல் ஆய்வாளர் தாமோதரன், வனவர் விக்ரம், அறக்கட்டளை சார்பில் நிர்வாக அறங்காவலர் வெற்றிவேல், அறங்காவலர்கள் முருகானந்தம், கவிதா, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போக்குவரத்து அமைப்பாளர் கமலக்கண்ணன், திட்ட மேலாண்மை மற்றும் இயற்கை விழிப்புணர்வு அமைப்பாளர் பாலு, பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு அமைப்பாளர் சீனிவாசபிரபு, பசுமைக்குரல் அறக்கட்டளை மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp