கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் தெரு மின்விளக்குகள் சரிவர இயங்காததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கோவை மாவட்ட புதிய ஆட்சி தலைவர் திரு பவன் குமார் கிரியாப் பவனர் தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்கிற நிகழ்ச்சி வால்பாறையில் நடைபெற்ற போது மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மின் விளக்கு எரியாததால் பொதுமக்கள் சிரமப்படுவதை எடுத்துக் கூறியதோடு இது குறித்து மனு ஒன்று அளித்தனர்.
மனுவில் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு எங்கள் அமைப்பின் சார்பாக பணிவான வணக்கம்,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை மாவட்டம். வால்பாறையில் தற்பொழுது வனவிலங்கு தொல்லை அதிகமாக இருக்கிறது. பெரும்பாலான எஸ்டேட் பகுதிகளில் தொழிலாளர் குடியிருப்புக்குள் வனவிலங்கு வரும் பகுதிகளில் தெருவிளக்கு எரிவதில்லை. புதிதாக போடப்பட்ட தெருவிளக்குகளும் பயன்பாட்டிற்கு இல்லை. பல இடங்களில் உயர்கோபுர விளக்குகளும் எரிவதில்லை.
எஸ்டேட் பகுதிகளில் நகராட்சியால் பல லட்ச ரூபாய் செலவில் போடப்பட்ட சாலைகள் (நல்லகாத்து, முடீஸ், வாழைத்தோட்டம்) இன்னும் பல பகுதிகளில் ஒரு வருடங்கள் ஆகவில்லை. தரமற்றதாகவும், குண்டும் குழியுமாகவும் உள்ளது. இன்னும் எஸ்டேட் பகுதிகளில் மருத்துவ வாகனம், எரிவாயு வாகனம் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பழுதான சாலைகளை சரிசெய்யவும் தற்பொழுது போடப்பட்டுள்ள புதிய சாலைகளில் உள்ள பழுதுகளை நீக்கித் தருமாறு பொதுநலத்துடன் கேட்டுக் கொள்கிறேன் என்று முடிகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.