கந்தர்வக்கோட்டை பிப் 08. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மணற்கேணி செயலியை பயன்படுத்துவது தொடர்பான பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பள்ளி வேளாண்மை குழு தலைவி கலாராணி துணைத் தலைவி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். அறிவியல் ஆசிரியர் ரகமதுல்லா மணற் கேணி செயலி குறித்து பேசும்பொழுது மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் கல்வி கற்பித்தலுக்கு பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி அரசு பள்ளிகளின் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தக் கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தக்கூடிய வகையில் மணற்கேணி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலுள்ள பாடங்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில வழி காணொளி காட்சிகள் சிறந்த தொழில்நுட்ப தளத்தில் மாணவர்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு பொது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது அரசு தொடக்கப் பள்ளிகளில் 20,000 மேற்பட்ட ஸ்மார்ட் போர்டும், நடுநிலைப் பள்ளிகளில் ஹைடெக் லேப் அமைக்கப்பட்டுள்ளது . மணற்கேணி செயலியில் ஒவ்வொரு வகுப்பிற்கும் பாடவாரியாக வீடியோ பதிவேற்ற செய்யப்பட்டுள்ளது. அதை மாணவர்கள் பயன்படுத்தும் விதமாக பெற்றோர்களுக்கு கூட்டத்தின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கல்வியையும் கற்றல் முறையையும் ஜனநாயகப்படுத்துவதை பள்ளிக் கல்வித் துறை இலக்காகக் கொண்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக, மணற்கேணி’ என்ற செயலி வடிவில் கற்பித்தல்-கற்றல் சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளது. இச்செயலியை மாணவர்கள் எளிதாகவும், இலவசமாகவும் பயன்படுத்த முடியும்.
மணற் கேணி செயலியில் ஒவ்வொரு காணொலியின் முடிவிலும் கேள்விகள் கேட்கப்பட்டு கற்போரின் புரிதல் திறனை சரி பார்க்கும் வசதியும் உள்ளது.
மணற்கேணி செயலி குறித்த விழிப்புணர்வை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களாகிய நீங்கள் சக பெற்றோர்களுக்கு ஏற்படுத்தி கைபேசியில் பதிவிறக்கம் செய்து மாணவர்கள் பயன்படுத்த ஊக்கப்படுத்தவும்.என்று பேசினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் நிவின், வெள்ளைச்சாமி, ஜெம்ம ராகினி ஹில்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.