தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேலநம்பிபுரம், புதூர், சின்னவநாயக்கன்பட்டி, சல்லிசெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமையில் புதூர் ஒன்றியத்திற்கான பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ கட்சியினரிடம் பேசுகையில், தமிழக மக்களுக்காக அதிமுக கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது, தமிழகத்தில் தற்போது கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது என திமுக அரசை விமர்சனம் செய்து பேசினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பூத் கமிட்டி நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து கட்சியினருக்கு ஆலோசனை வழங்கி பூத் கமிட்டியில் இளைஞர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் பிரிவில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கூறியதோடு கட்சி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கை பதிவு விண்ணப்ப படிவங்களை வழங்கினார். விளாத்திகுளம் தொகுதியில் இன்று நடைபெற்ற இந்த பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஒன்றிய செயலாளர்கள் தனவதி, சுசீலா தனஞ்செயன், ஆண்டி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ந.பூங்கோதை, தூத்துக்குடி.