கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக அடிப்படை வசதியைக் கூட செய்து கொடுக்க முடியாமல் வாக்களித்த மக்களை சந்திக்க முடியவில்லை என்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் கூறுகின்றனர் மேலும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வால்பாறை நகராட்சி கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கின்றனர்.
இதை அறிந்த வால்பாறை பகுதிக்குட்பட்ட பொது மக்கள் இனிமேலாவது வால்பாறை நகராட்சி சாமானிய மக்களின் அடிப்படைத் தேவைகளை செய்து கொடுப்பார்கள் நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். அதே சமயம் இதுவரை கோடி கோடியாக மக்கள் வரிப்பணம் வீணானது இனிமேலாவது இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் இது தொடர்பாக இது தொடர்பாக மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கூறுகையில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் அனைவரும் வாக்களித்த வாக்காளர்களை ஏமாற்றுவதற்காக இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கவுன்சிலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இந்த மாதிரி ஆர்ப்பாட்டத்தை அறிவிப்பார்கள் கடைசியில் கிடைக்க வேண்டியது கிடைத்துவிட்டால் ஆர்ப்பாட்டத்தை அதிகாரியுடன் சுமூகமாக பேசி உடன்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஒரு பிம்பத்தை உண்டு பண்ணி செய்தித்தாள்களிலும் செய்திகளை தங்கு தடையில்லாமல் வரவைத்து மக்களை ஏமாற்றுவார்கள். ஆர்ப்பாட்டத்தை நடக்காமல் விட்டு விடுவார்கள் ஆனால் இதில் வாக்களித்த வாக்காளர்கள் என்றுமே ஏமாளித்தனமாக கோமாளியாக
இருக்க வேண்டியது தான் இவர்கள் வாக்குக்கு எப்பொழுது பணமோ பரிசு பொருட்களோ வாங்காமல் இருக்கிறார்களோ அப்பொழுதுதான் இவர்களையும் அரசு அதிகாரிகளையும் எதிர்த்து கேள்வி கேட்க முடியும் அதுவரை நம் பொறுத்துதான் போக வேண்டும்.
கண்டன ஆர்ப்பாட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம் இந்த ஆர்ப்பாட்டம் நடக்குமா நடக்காதா? என்பது தெரியாது நடந்தால் மக்களுக்கு நல்லது நடக்காவிட்டால் யாருக்கு நல்லது என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் எதுவாக இருந்தாலும் பொருத்திருந்து பார்ப்போம்.
-P.பரமசிவம் வால்பாறை