
கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலை சாலையில் கெடிமேடு பகுதியில் எம்டிஎஸ் என்ற பேக்கரி செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியின் கழிவுகளை சாலையோரத்தில் தொடர்ந்து கொட்டி வந்ததாக புகார் எழுந்தது. இதை அடுத்து வட்டாட்சியர் வாசுதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி நிர்வாகத்தினர், போலீசார் இணைந்து ஆய்வு செய்ததில் குப்பை கொட்டியது உறுதி செய்யப்பட்டது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதை அடுத்து தற்காலிகமாக பேக்கரியின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பேக்கரியை மூடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் பேக்கரிக்கு 50000 அபராதமும் விதிக்கப்பட்டது அதிகாரிகளின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் அதேசமயம் பாரபட்சம் பார்க்காமல் இதுபோன்று செயல்களில் ஈடுபடும் நிர்வாகத்தின் மீது இதே போன்ற நடவடிக்கை தொடர வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.











