
கோவை மாவட்டம் வால்பாறை, எஸ்டேட் பகுதிகளில் தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை, தேவையான இடங்களில் தெரு விளக்கு கிடையாது, ஒரு சில பகுதிகளில் குறைந்த வெளிச்சம் உள்ள தெரு விளக்குகளை பயன் இல்லாமல், பெயரளவுக்கு உள்ளது. எஸ்டேட் பகுதிகளில் மருத்துவ வசதி பெற முடியாமல் சாலைகள் குண்டு குழியுமாக உள்ளது. ஆழியாரிலிருந்து வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் சாலைகளில் இரு புறங்களின் அடர்ந்த மரக்கிளைகள் வளர்ந்து உள்ளது. வாகன ஓட்டுநர்கள் மிகவும் சிரமப்படுகின்றன. ஒரு சில நேரங்களில் விபத்துக்கும் ஏற்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்கு தாக்குதலும் ஏற்படுகிறது. வால்பாறை, எஸ்டேட் பகுதிகளிலும் எளிதில் வனவிலங்கு மனித மோதலும் ஏற்படுகிறது. பொதுமக்கள் நடமாடுவதற்கு அச்சப்படுகிறார்கள். இது போன்ற பலவேறு பிரச்சனைகள் தொடர்ந்து வால்பாறைகளை நிலவுகிறது. ஆனால் மாவட்ட நிர்வாகமும் வால்பாறை வருவாய்த் துறையும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது . சாமானிய அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது அரசியல்வாதியை விட அரசு அதிகாரிகளின் பங்கு மிகவும் இன்றி அமையாது. தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் வருவாய் நிர்வாகமும் மக்களின் அடிப்படை தேவைகளை செய்து கொடுக்கிறார்கள் என்பதையும் தாங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதேபோல் கோவை மாவட்டம் மற்றும் வால்பாறையும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வால்பாறை பரமசிவம் ஆட்சியாளரிடம் கடிதத்தை கொடுத்து நேரடியாக பேசினார்.
இது தொடர்பாக அவரிடம் கேட்டப் பொழுது “தமிழகம் முழுவதும் அரசியல்வாதியை விட அரசு அதிகாரிகள் சாமானிய அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உடனுக்குடன் செய்து கொண்டிருக்கிறார்கள். நமது கோவை மாவட்டம் நிர்வாகமும், வால்பாறை வருவாய் துறையும் செய்து தருவார்கள் என்ற நம்பிக்கையில் பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.











