
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 31ஆம் தேதி காலை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொண்ட பின் மாலை 7 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விளாத்திகுளத்தில் பிரச்சாரம் முடிந்த பின்பு கோவில்பட்டியில் தனியார் விடுதியில் தங்கி, ஆகஸ்ட் 1-ம் தேதி காலை 8 மணிக்கு கோவில்பட்டியில் மக்களை சந்திக்கிறார், அதனைத் தொடர்ந்து மாலை 7 மணி அளவில் ஓட்டப்பிடாரம் தொகுதி மக்களை சந்திக்கிறார், பின்னர் ஆகஸ்ட் 2ஆம் தேதி தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்கிறார்.
விளாத்திகுளத்தில் ஜூலை 31ஆம் தேதி இரவு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அதேபோல் விளாத்திகுளம் தொகுதி முழுவதிலும் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க பொதுமக்களை அழைத்து வர அதிமுக சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ள ஏதுவான இடம் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் தேர்வு செய்வது குதித்து முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு அதிமுகவினருடன் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து மதுரை சாலையில் உள்ள மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் குட்லக் செல்வராஜ் இல்லத்தில் வைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், என்.கே.பெருமாள், மோகன், ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், பால்ராஜ், தனஞ்செயன், தனபதி, அன்புராஜன், விளாத்திகுளம் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் குட்லக் செல்வராஜ், நகர செயலாளர் ராஜகுமார், மாரிமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு சுரேஷ்குமார், ஆனந்தகுமார், மோகன், மகளிர்அணி பிரியா, சாந்தி சிறுபான்மை பிரிவு சதீஷ், நிர்வாகிகள் வேல்முருகன், வரதராஜ பெருமாள், சண்முகசாமி, பெருமாள்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.











