
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்;

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மக்களின் அன்றாட தேவைகளையும், அரசுத் திட்டங்களின் பலன்களையும் அவர்களது இல்லங்களுக்கே நேரடியாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில், உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஜூலை 15, சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட வாண்டையார் திருமண மண்டபத்தில் தொடங்கி வைத்தார். முதல்வர் தொடங்கி வைத்துள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கம் வரவேற்று வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். நகர்ப்புறப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 13 துறைகள் 43 சேவைகள் ஊரகப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 15 துறைகள் 46 சேவைகள்
மக்கள் எளிதாக பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 2025 முதல் நவம்பர் மாதம் 2025 வரை பத்தாயிரம் சிறப்பு முகாம்கள் அரசு சேவைகளை பொதுமக்களுக்கு மிக விரைவாகவும் எளிதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் கொண்டு சேர்ப்பதற்காக உங்களுடன் ஸ்டாலின்திட்ட முகாம்கள் அனைத்து பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.
சாதி சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய, ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய போன்ற பல கோரிக்கைகளுக்கு அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி அலுவலர்கள் நேரடியாக உங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வந்து தீர்வுகளை வழங்க உள்ளனர்.
உங்களுடன் ஸ்டாலின்இந்த திட்டத்தின் மூலமாக மக்கள் பயன்படக்கூடிய வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.
முகாம்கள் நடக்கும் ஒரு வாரத்துக்கு முன்பு வீடு, வீடாகச் சென்று மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். வாரத்தில் நான்கு நாள்கள் முகாம் நடைபெறும். இது நவம்பர் மாதம் வரை நடைபெறவிருக்கிறது.
இந்த புதிய திட்டம் முதல்வரின் முகவரி திட்டத்தின் வழியே செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு மிகுந்த பயனளிப்பதாக உள்ளது. அவர்களுடைய இருப்பிடங்களிலே வந்து மாற்றுத்திறனாளிகளின் குறைகள் நிவர்த்தி செய்வதால் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவி தொகை , மாற்றுத்திறனாளிகளின் மூன்று சக்கர வாகனம் உள்ளிட்டவை குறித்து உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திலே மனு அளிப்பதால் எங்களுடைய கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்பட இருக்கிறது என்பது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மற்றும் அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் உயர அலுவலர்களுக்கும் மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.












