
திருப்பூர் மாவட்டம் பல்லடம்: திடீரென பூமலூர் பகுதியில் சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் கே என் எஸ் எஸ் எம் கே கே ஜி என் எஸ் கே கார்டனில் அடிப்படை சாலை மின்விளக்கு மற்றும் குடிநீர் இல்லாமல் மக்கள் சுமார் மூன்று வருடங்களாக சிரமப்படுகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

2023 ஆம் ஆண்டு பகுதிக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என தனி வட்டார வளர்ச்சி அலுவலர் ஒப்புதல் சீட்டை வழங்கி உள்ளார். ஆனால் இரண்டு ஆண்டு காலமாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அனைத்து தரப்பிலும் பொதுமக்கள் கோரிக்கை பல முறையை வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் பொதுமக்கள் அனைவரும் கூட்டமாக வி.எ.ஒ. அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் சுமார் 32 லட்சத்திற்கு அத்திக்கடவு திட்டம் தொடங்கப்பட்டதாக தமிழக அரசு சார்பில் பேனர் அடித்து ரோட்டில் வைத்துள்ளனர். ஆனால் அதே பகுதியில் உள்ள எங்களுக்கு எந்த ஒரு குடிநீருக்கான வேலை வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பாஷா திருப்பூர்.











