தேயிலை கொழுந்து எடுக்கும் இயந்திரத்தின் மூலம் தொழிலாளர்களை ஏமாற்றிய நிறுவனம்!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணாறு சுற்றி அமைந்திருக்கும் டீ பவுடர்களை உருவாக்கும் பல்வேறு கம்பெனிகள் நிறுவனங்களை நடத்தி வருகின்றன.
அதில் தற்பொழுது தேயிலை இலைகளை பறிப்பதற்காக புது புது இயந்திரங்களை ஈடுபடுத்தி வருவது வழக்கமாக உள்ளன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அவ்வாறே லாக்காடு எஸ்டேட் தேவிகுளம் பஞ்சாயத்து சார்ந்த லாக்காடு எஸ்டேட் பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்களிடத்தில் தேயிலை பறிக்கும் இயந்திரத்தை வாங்க பாதி பணம் கட்ட வேண்டும் என்று சொல்லி அதன் மூலமாக இயந்திரத்தை வாங்கி உள்ளனர். ஆனால் ஒரு வருடம் கழிந்த பின்பு நிர்வாகமே அனைவருக்கும் இயந்திரத்தை இலவசமாக கொடுத்த நிலையில் முன்பு பணத்தைக் கட்டி இயந்திரத்தை வாங்கினவர்களுக்கு அந்த பணத்தை திருப்பி தரவில்லை என்றும் தொழிலாளர்கள் நிர்வாக மேலாளர்களிடம் கேட்ட பொழுது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிப்பதாகவும் தங்களுடைய பணத்தை தர மறுப்பதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

பின்னர் உடனடியாக தேவிகுளம் சப் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்களுடைய புகார்களை அளித்துள்ளனர். புகார் கலக்டர் வரை சென்றது நிமித்தமாக உடனடியாக நிர்வாகம் தொழிலாளர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளன. தங்களுடைய பணங்களை தருவதை குறித்து பரிசீலிக்கப்படும் என்பதை தெரிவித்துள்ளனர். மட்டுமல்லாது தொழிலாளர்கள் வங்கியில் எடுக்கும் லோன்களை கம்பனி நிர்வாகமே கட்டுவதாக பணம் பிடிக்கப்படுகிறது ஆனால் வங்கிகளில் பணம் செலுத்துவதில்லை எனவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேவிகுளம் சப் கலெக்டர் அவர்கள் தொழிலாளர்களின் நலன் கருதி இந்த பிரச்சினைகள் அனைத்தையும் சரி செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன்.
மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts