ஓட்டு திருட்டில் ஈடுபட்ட பாஜகவை கண்டித்து..! வால்பாறை காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்…

கோவை மாவட்டம் வால்பாறை நகர காங்கிரஸ் கமிட்டி ஏற்பாட்டில் நடந்த சுதந்திர தின விழா மற்றும் ஓட்டு திருட்டில் ஈடுபட்ட பாஜகவையும் தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் வால்பாறை நகர காங்கிரஸ் தலைவர் திரு. அமீர் MP அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறையின் மாநில தலைவரும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான திரு.H. முகமது ஆரிப் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் மேலும் அவர் கூறுகையில்:-

பாஜக மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் இணைந்து ஓட்டு திருட்டில் ஈடுபட்டது அப்பட்டமாக வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்  ராகுல் காந்தி MP அவர்கள் ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டை பதிவு செய்யும் பொழுது அதற்க்கு சரியான அல்லது விளக்கத்தை தேர்தல் ஆணையம் கூற வேண்டும் அதை விட்டுவிட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற ஒரு சம்பிரதாய நிகழ்வை சுட்டிக்காட்டுகிறது.

இதிலிருந்து தெரிகிறது பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து ஓட்டு திருட்டில் ஈடுபட்டு திருட்டுத்தனமாக மோடி பிரதமராகி உள்ளார். வால்பாறையில் உள்ள பொதுமக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் காங்கிரஸ் கட்சி என்றுமே உறுதுணையாக நிற்கும் என்பதை கூறிக் கொள்கிறேன், வியாபாரிகளையும் இங்கு உள்ள பூர்வ குடி மக்களையும் காலி செய்து இந்த இடத்தை அதானிக்கும் அம்பானிக்கும் தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கடுமையான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. இந்த புதிய சட்டம் வருமேயானால் வால்பாறையில் யாரும் புதிதாக கட்டடங்களை கட்ட முடியாது அதே போன்று சுற்றுலாப் பயணிகள் வால்பாறைக்கு வருவது சிரமமாகும்,

இங்குள்ள மக்கள் சுற்றுலா பயணிகளை நம்பியே பல வியாபார தளங்களை நடத்தி வருகின்றனர் இவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும். காட்டை மறித்து யானை வழித்தடங்களை மறைத்து கோவையில் ஜக்கி வாசுதேவ் எனும் சாமியார்  பல கட்டிடங்களை  கட்டி யானை வழித்தடத்தை மரித்து இன்றளவும் தன்னுடைய ஆசிரமங்களை நடத்தி வருகிறார். நான் கேட்கிறேன் மத்திய அரசிற்கு தைரியம் இருந்தால் திராணி இருந்தால் அத்துமீறி கட்டிடங்களை கட்டி உள்ள ஜக்கி வாசுதேவ்வின் கட்டிடங்களை  மத்திய அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்த முடியுமா.? அல்லது அத்துமீறிய கட்டிடங்களை  இடிக்க முடியுமா.?

இதையெல்லாம் விட்டுவிட்டு அப்பாவி வால்பாறை பொதுமக்களை கூண்டோடு காலி செய்வதே முழு நோக்கத்தோடு செயல்படும் மத்திய பாஜக அரசை இந்தக் கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கிறேன் என்று  அவர் பேசினார். இந்த கூட்டத்தில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறையின் தலைவர் திரு MM. ஹாரூன் அவர்கள், குறிச்சி சர்க்கிள் காங்கிரஸ் தலைவர் A. முகமது இஸ்மாயில் அவர்கள், தொழிற்சங்க தலைவர் UK. கருப்பையா அவர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது ஹாரிஸ் அவர்கள், மாவட்ட துணைத் தலைவர் ரியாஸ் அவர்கள், தேவ கிருபை, சந்திரசேகர், ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

-திவ்யகுமார் வால்பாறை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts