கடம்பூர் ராஜீ எம்எல்ஏ பிறந்தநாள் விழா – கடலை மிட்டாய் மாலை அணிவித்த கழுகுமலை இளைஞர் பாசறையினர்!!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜு பிறந்தநாள் விழா கிருஷ்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி எம்எல்ஏ வை கழுகுமலை இளைஞர்கள் கடலை மிட்டாய் மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டத் துணைச் செயலாளர் K.P.ராம்மோகன் தலைமையில் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ அவர்களுக்கு கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெற்றுக் கொடுத்ததின் நினைவாக கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ அவர்களுக்கு கடலை மிட்டாய் மாலை அணிவித்து கழுகுமலை இளைஞர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை வடக்கு மாவட்ட செயலாளர் M.R.V.கவியரசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஸ்ரீதர், அம்மா பேரவை தலைவர் மாரியப்பன், நகர எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் கருப்பசுவாமி, கழுகுமலை இளைஞர் இளம்பெண் பாசறை நிர்வாகிகள் அரவிந்த்,பிரபாகரன், கார்த்திக், சரவணன், கருமலை ராஜ், கமலேஷ், மணிகண்டன், சூர்யா உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts