கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு கபடி போட்டி!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் பாலை நிலத்தின் சார்பில் தேசிய விளையாட்டு தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சிந்தியா அனைவரையும் வரவேற்றார். மகிழ்முற்ற ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா தேசிய விளையாட்டு தினம் குறித்து பேசும் பொழுது;

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்திய தேசிய விளையாட்டு தினம் இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29 இல் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் தேசிய விளையாட்டு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினம் புகழ்பெற்ற ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு முதல் இந்த நாள் தேசிய விளையாட்டு தினமாக அறிவிக்கப்பட்டது.
தேசிய விளையாட்டு தினம் அனுசரிக்கப்படுவதன் நோக்கம் விளையாட்டு வீரர்களின் பங்களிப்பை நினைவுகூர்தல்.

இளைஞர்களிடையே விளையாட்டு நடவடிக்கைகளை ஊக்குவித்தல்,
நாட்டில் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும், ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்களின் கடின உழைப்பை நினைவுகூர்தலுக்கும் வழிவகுத்தல் என்று பேசினார். தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு கபடி போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. போட்டியின் நடுவராக கதிர்காமன் செயல்பட்டார்.
நிறைவாக கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts