கராத்தே இந்திய ஆர்கனைசேஷன் இன் தேசிய அளவிலான நடுவர் மற்றும் பயிற்சியாளர் தேர்வு!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கராத்தே இந்தியா ஆர்கனைசேஷன் அமைப்பின் மூலமாக தேசிய அளவிலான நடுவர் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாண்டிச்சேரி மற்றும் கேரளா ஆகியவற்றிலிருந்து நூறுக்கும் மேற்பட்ட பயிற்சியாளர் மற்றும் நடுவர்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த தேர்வினை கராத்தே இந்தியா ஆர்கனைசேஷன் அமைப்பின் தேசிய நடுவர் குழு ஆணையத்தின் செயலாளர் திரு அல்தாப் ஆலம் (உலக கராத்தே அமைப்பின் நடுவர் மற்றும் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேஷன் செயலாளர்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் கராத்தே இந்தியா ஆர்கனைசேஷன் அமைப்பின் நடுவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்தத் தேர்வினை திருப்பூர் மாவட்ட கராத்தே சங்கம் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தது வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கருத்து சங்க தலைவர் திரு. ரவிச்சந்திரன் மற்றும் செயலாளர் திரு. சக்திவேல் பொருளாளர் திரு கௌதம் ரகுநாதன் அவர்கள் ,திருப்பூர் மாவட்ட நடுவர் குழு தலைவர் திரு. சரவணன் ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ப. செந்தில் குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts