
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அண்டை மாநிலமான கேரளாவில் பால் உற்பத்தியாளர்கள் பால் விலையை உயர்த்தி தரக்கோரி நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவர்களின் கோரிக்கை ஏற்கப்படாமல் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது இதனால் பால் உற்பத்தியாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் 29.07.2025 அன்று நூற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிணைந்து
பாலக்காடு கல்லேப்புள்ளி பகுதியில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி மில்மா ஆலையை நோக்கி பேரணி சென்று அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இதுகுறித்து மனு அளித்தனர் பிறந்தநாள் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் M D F A பாலக்காடு மாவட்ட தலைவர் ஜே சிவகுமார்,துணை தலைவர் மீனாட்சிபுரம் வழக்கு பாறை தர்மராஜ் செயலாளர் அஜித், துணைச் செயலாளர் வண்ணாமலை வேணுகோபால்,
மற்றும் எல்லைக்காடு தியாகுமார், ராமர் பண்ணை துரை, ராசு,டேம் நித்திய பிரபு மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டமானது கேரளா முழுவதும் அந்தந்த பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிணைந்து மில்மா ஆலையை நோக்கி பயணம் மேற்கொண்டு போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் நியாயமான போராட்டம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.











